1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (12:54 IST)

மீனம் - மார்கழி மாத பலன்கள்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: ராசியில் சந்திரன்  - பஞ்சம பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சனி  - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன  போக ஸ்தானத்தில் செவ்வாய் ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
 
வாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் மிக்க மீன ராசியினரே இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.  மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.
 
உத்யோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். சிலருக்கு புதிய உத்யோகம் கிடைக்கும். அலுவலக ரீதியான  பயணங்களை மேற்கொள்வீர்கள். 
 
வியாபாரிகள் முனைப்புடன் வியாபாரம் செய்வீர்கள். லாப இலக்குகளை எட்டுவீர்கள். கூட்டாளிகளும், நண்பர்களும் ஒத்துழைப்புடன்  நடந்துகொள்வார்கள். கடன் கொடுக்காமல் கறாராகப் பேசி வியாபாரத்தை விரிவுபடுத்தவும். மற்றபடி பழைய கடன்களைத் திருப்பிச்  செலுத்துவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சிறிய அளவில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். 
 
அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யமாக  சமாளிப்பீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். அதேநேரம் உங்கள் கட்சியினரிடமும், எதிர்கட்சியினரிடமும் மனம்  திறந்து பேச வேண்டாம். 
 
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனம் திருப்தி அடைவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களிடமிருந்து சிறுசிறு நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரசிகர்களின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவீர்கள். 
 
பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை  சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர சகோதரி உறவில் இருந்த விரிசல்கள் மறைந்து உறவு சீர்படும். உடல் உபாதைகளால் பெரிய பாதிப்புகள்  ஏற்படாது. 
 
மாணவமணிகள் முதலிடத்தைப் பெறுவீர்கள். பெற்றோருக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறுவீர்கள்.  விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
 
பூரட்டாதி 4ம் பாதம்:
 
இந்த மாதம் எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய  முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். 
 
உத்திரட்டாதி:
 
இந்த மாதம் பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல்  வருமானம் கிடைக்கும். 
 
ரேவதி:
 
இந்த மாதம் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் வெளிப்படும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான  யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். 
 
பரிகாரம்: அருகிலிருக்கும் ஏதேனும் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். கொண்டைக்கடலை மாலையை உங்கள் கையால் கோர்த்து ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்குப் படைக்கவும். அவரின் அருளால் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
சந்திராஷ்டம தினம்: ஜனவரி1, 31 
அதிர்ஷ்ட தினம்: டிசம்பர் 23, 24.